!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, December 30, 2013

டெல்லி: என்ன செய்யலாம்?


photo-india today

டெல்லியில் ஒருவழியாக ஆம் ஆத்மி பார்ட்டி அதிகாரத்துக்கு வந்துவிட்டது. யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களோ அவர்களின் ஆதரவிலேயே ஆட்சி! விதி வலியது என்று சொல்வார்களே, அது இதுதானா!

இருந்தாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் யாரையும் குறை சொல்ல முடியாது. எரிகிற கொள்ளியில் எது பரவாயில்லை என்று மக்கள் தேர்தலில் முடிவெடுக்கிறார்கள். அதேபோல், எந்த முடிவெடுத்தாலும் அது முரண்பாடாக போய் முடியும் நிலையில், அரசியல்கட்சிகளுக்கும் வேறு வழியில்லை. `பரவாயில்லை` என்ற முடிவை எடுக்க வேண்டியதுதான். அரவிந்த் கேஜ்ரிவாலின் முடிவு அந்தவகைதான்.

Tuesday, December 17, 2013

மிஷ்கின் ஃபிலிம் காட்டறார்

மாரியம்மன் கோவில்--Indian express  

இங்கே அட்கேஷ்வர் என்ற ஏரியாவில் உள்ளூர் காவலரும் உலக காவலரும் அருகருகே இருக்கிறார்கள். அதாவது இந்த பக்கம் போலீஸ், அந்த பக்கம் கடவுள் (அட்கேஷ்வர்).

ஒருமுறை டூ வீலரில் வந்தவர்கள் வண்டியை விட்டு இறங்கி போலீசாரிடம் லைசன்ஸ் மற்றும் மற்ற இத்யாதிகளை பவ்யமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை பார்த்துக் கொண்டே நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். கோவிலுக்கு அருகில் வந்தபோது, அங்கே ஒருவர் டூ வீலர் வண்டியில் உட்கார்ந்துகொண்டே கோவிலை (சாமியை) பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெட்டிஷன் நிறைய இருக்கும் போலிருக்கிறது.  நான் அதை தாண்டி கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தபோதும் முணுமுணுப்புதான். இவ்வளோ பெட்டிஷன் வைச்சிருக்கிறவர் அதை உள்ள போய் முறையா சொல்ல வேண்டியதுதானே?

Wednesday, December 11, 2013

மூன்று விஷயங்கள்


பதிவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. காரணத்தை சொன்னால் அது புலம்பலில் போய் முடியும். எனவே அது வேண்டாம். நேரடியாகவே பதிவுக்கு போய்விடுவோம்.

லைப்ரரி

இங்கே (அகமதாபாத்) வந்து ஓராண்டு முடிந்த பிறகுதான் லைப்ரரியை தேட ஆரம்பித்தேன். நேரத்தை கொலை செய்ய வேண்டுமே, அதுதான் காரணம். மனிதர்களுடன் பழகமுடியவில்லை. அரை மணி நேரம் பேசினால் 6 கேள்விகள் கேட்கிறார்கள். அதில் 5 கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. புத்தகம்தான் நல்ல துணையாக இருக்கிறது. இணையம் கண் வலியை கொடுப்பதால், லைப்ரரிதான் சரி என அதை தேட ஆரம்பித்தேன்.