!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, March 18, 2013

பத்திரிகையாளர்களே...நல்லா பாத்துக்குங்க...


இந்தியாவில் பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை. நானும் அதில் சிலவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு எழுத முயற்சிப்பதுண்டு. ஆனால் அது குறித்து மேலும் படிக்க ஆரம்பிப்பதிலும், பின்னர் எண்ணங்களை பதிவாக மாற்றி செம்மைபடுத்துவதிலும் நேரம் போய்விடுகிறது. அதனால், தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பிரச்சினை பற்றி எரியும் போது நான் வேறு ஏதோ ஒன்றை பற்றி எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க கூடாது.

இது கடந்த வாரம் நான் கவனித்த செய்திகள்   

ஷேர் மார்கெட் நிறைய நம்பிக்கையையும் கனவுகளையும் காட்டியபோது நான் எதிர்காலம் குறித்து திட்டமிட ஆரம்பித்தேன். 

இப்படி திட்டமிடும் நேரத்தில் கல்யாண ஆசை மறைந்து, அரசியல் ஆசை தலைதூக்க ஆரம்பித்தது.பணம் என்னை  அங்கே  கொண்டு செல்லுமானால், மக்களிடம், `இதபாருங்க, எனக்கு ஷேர் மார்கெட்ல பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அதனால தைரியமா எனக்கு ஓட்டு போடுங்க. நான் ஊழல் பண்ணமாட்டேன்` என்றும்,  கட்சிக்காரர்களிடம், `எனக்கு (நேரடி) உறவுகள் எதுவும் கிடையாது. திருமணமும் செய்யமாட்டேன். அதனால் வாரிசு பிரச்சினைகள் வராது` என்றும் உத்தரவாதம் கொடுப்பது என்று முடிவு செய்தேன்.

அதையும் தாண்டி,  உச்சகட்டமாக, ஒருவேளை ஏதாவது ஒரு பேரழகியை பார்த்து மயங்கி திருமணம்  செய்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டேன் என்று வெளிப்படையாகவே மக்களிடம் அறிவிப்பது என்றும் நினைத்திருந்தேன்.

திண்ணை தூங்கிகளின்  கனவு 

இப்படியெல்லாம் நான் கனவு கண்டபோது கடை கடலூரில் இருந்தது. அந்த கடை வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றாலும், அந்த கட்டிடம் அடிப்படையில் அந்த காலத்து சத்திரம். அங்கே திண்ணையாக இருந்ததைதான் அவர் கடையாக மாற்றி எனக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

காலம்  காலமாக மக்கள் அந்த திண்ணையில் உட்கார்ந்து கனவு கண்டிருப்பார்கள் போலிருக்கிறது. நான் போய்  உட்கார்ந்தவுடன் எனக்கும் வந்தது. அதாவது திண்ணை தூங்கிகளின் கனவு. 

என் கனவுகள் நனவாகும் சூழ்நிலை வரவில்லை. வராவிட்டால் என்ன, அதிரடியாக ஜெயிலுக்கு போய் அப்படி ஒரு சூழ்நிலையை நாமே உருவாக்குவோம் என்று திட்டமிட்டால், அதுவும் கைகூடவில்லை. 

கடைசியில் நான் சொல்ல நினைத்த வசனத்தை ராகுல் காந்தி சொல்லிவிட்டார்.

இதற்கு முன் ராகுல் காந்தி மீது அவ்வளவாக மரியாதை கிடையாது. பெரும்பாலும் பிரபலங்களின் பிள்ளைகள் ஊதாரிகளாக, தறுதலைகளாகத்தான் இருப்பார்கள். பிரபலமும்,பணமும் வாழ்கையை அனுபவிக்கத்தான் தூண்டுமே தவிர, சிந்தனைவாதிகளாக மாற்றாது. இந்த எதார்த்தத்தை நானும் நம்புவதால், ராகுல் காந்தி மீது அப்படிப்பட்ட பார்வைதான் எனக்கு இருந்தது.

ஆனால், `நான் திருமணம் செய்யமாட்டேன். திருமணம் செய்து குழந்தை பெற்றால் அதுவும் வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்` என்று சமீபத்தில் ராகுல் காந்தி சொன்னபோது அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இப்படி சொல்லிவிட்டதால் மட்டும் அவரை ஒரு தலைவராக ஏற்க முடியாது. அதற்கு நிர்வாகத் திறமையும் வேண்டும். அது அவருக்கு இருக்கும் அறிகுறி தெரியவில்லை.இருந்தாலும் மனிதர்கள் திடீர் திடீரென்று நம்மை ஆச்சர்யப்படுத்தக் கூடியவர்கள். எனவே அதை காலம் முடிவு பண்ணட்டும். அதேசமயம் இந்த பேச்சு அவருக்கு ஓரளவு முதிர்ச்சி வந்திருப்பதை காட்டுகிறது. அந்த வகையில் சந்தோசம்.

அவனா நீ?  

இந்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியாவின் இணையதளத்தில் படித்தேன். செய்தியை படித்தபோது வந்த சந்தோசம், அதற்கு வந்த  வாசகர்களின் விமர்சனங்களை படித்தபோது மறைந்து போனது. ராகுல் காந்தி  அந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டிருந்தார். 

அவருடைய காதலி வெளிநாட்டு பெண் என்பதால் அது அவருடைய அரசியல் வாழ்கையை பாதிக்கும் என்று  சோனியா காந்தி தடுக்கிறார் என்று சிலர். `ராகுல் காந்திக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இல்லை. அவர் ஒரு gay` என்று வேறு சிலர்.

இதை படித்தவுடன் எனக்கு தலை சுற்றியது. ஒருவேளை நானும் அப்படி ஒரு அறிக்கை விட்டிருந்தால், என்னை பார்த்து, `அவனா நீ?` என்றல்லவா கேட்டிருப்பார்கள்.

அதிலும் தமிழ்நாட்டு மேடை பேச்சுகளை நான் நிறைய கேட்டிருக்கிறேன். அய்யகோ, அங்கே அவர்கள் எப்படியெல்லாம் தாளிப்பார்களோ? விடக்கூடாது. மடியில கணம் இருந்தாத்தானே பயப்படனும். எனவே நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

அதாவது, ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வருமேயானால், யாராவது ஒரு பெண்ணை ஓட்டலுக்கு `காபி சாப்பிட` அழைத்துப் போய், அவரை பத்திரிகையாளர்கள் கண்ணில் படும்படி வெளியே அனுப்ப வேண்டும்.

அதன் பிறகுதான் என் கொள்கையை சொல்ல வேண்டும். அதேசமயம் பத்திரிகையாளர்களிடம், `நல்லா பார்த்துக்குங்க.. இங்க `எந்த` பிரச்சினையும் இல்லை` என்று சொல்லாமல் சொல்ல வேண்டும்.

அரசியல்னாலேஅதுல பல தலைவலிகள் வரும் என்பது  தெரியும். பட் ..இப்படியெல்லாமா வரும்?

தம்பி அவசரப்படாதே

என்னதான் மக்கள் மனம் குளிர நான்  ஏகப்பட்ட உத்தரவாதம் கொடுத்தாலும், தமிழ் நாட்டு மக்களை பற்றி எனக்கு தெரியும். இவர்கள் விடிய விடிய கதை கேட்டுவிட்டு, கடைசியில் தேர்தல் நாள் அன்று இரட்டை இலையிலும், உதய சூரியனிலும் குத்திவிட்டு, `தம்பி, எங்களுக்கு பழகிப் போச்சுப்பா` என்று நமக்கு அல்வா கொடுத்து விடுவார்கள்.

எனவே நான் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருக்கும் காலத்தில் நம்மால் சும்மா இருக்க முடியுமா? அதற்கும் ஒரு ஐடியா வைத்திருந்தேன். ஏற்கனவே `ஒரு கோடி பரிசு` என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதை அமல்படுத்துவது என்றும் திட்டம். அடுத்தபடியாக நான் நினைத்தது மக்கள் நீதிமன்றம்.

இது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். கிராம பஞ்சாயத்தாக இருந்தது. தற்போது சில இடங்களில் கட்ட பஞ்சாயத்தாக இருக்கிறது. இதை செம்மைபடுத்தி மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஒரு அமைப்பை உருவாக்குவது என்பது என் திட்டம்.

அதாவது ஒவ்வொரு நகரத்திலும் /கிராமத்திலும் படித்த நல்ல மனிதர்களை தேர்தெடுத்து அவர்களுக்கு நானே சம்பளம் கொடுத்து நீதிபதியாக நியமிப்பது. இடம் பிரச்சினை இல்லை. ஏதாவது மரத்துக்கு கீழே துண்டை விரிக்க வேண்டியதுதான். அல்லது யாராவது கொடுப்பார்கள்.

ஆனால் தமிழ்நாடு முழுக்க நீதிபதிகளை நியமித்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம்?

ஷேர் மார்கெட்டில் அந்த அளவுக்கு பணம் கொட்டும் என அப்போது நான் முட்டாள்தனமாக நம்பினாலும், இது எதிர்காலம் குறித்த கற்பனை. எனவே கற்பனை செய்யும் போது அதில் லாஜிக் பார்க்கக் கூடாது. 

அதேசமயம் எதார்த்தமாக பார்த்தால் இது சாத்தியம். இந்த நீதிமன்றங்கள் தவறு செய்பவர்களை சிறையில் அடைக்க முடியாது. குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தர்ம அடி கொடுக்கலாம். அவர்களுக்கு கடுமையாக அபராதமும் விதிக்கலாம்.

எனவே இதை நான் ஸ்ட்ராட் பண்ணி விட்டால் போதும், அதன் பிறகு தனக்கு தேவையான நிதியை அபராதம் மூலம் அது தானாகவே திரட்டிக் கொள்ளும். நீதிபதிகளிடமும் சொல்லிவிடலாம்.வசூல் குறைந்தால் உங்களுக்கு சம்பளமும் குறையும் என்று. அப்புறமென்ன... அவர்கள் தீட்டி விடுவார்கள் தீட்டி.

இன்றைய உருப்படாத நீதித்துறைக்கு இது ஒரு மாற்றாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சினைக்கு போலீஸ் ஸ்டேஷன் போவதை மக்களும் விரும்ப மாட்டார்கள். பெண்களை ஏமாற்றிய குற்றம், சில பல ஆயிரம் ஏமாற்றிய குற்றம் போன்ற சிறிய குற்றங்களை இவர்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். இது மக்களுக்கு எளிமையாக விரைவாக நீதி வழங்கும் முறையாக இருக்கும். நீதி மன்றங்களுக்கும் சுமை குறையும்.

வெளிப்படையான தேர்வு முறையில், படித்த மக்கள் நீதிபதிகளாக வருவதால் தீர்ப்புகளில் பெருமளவு முரண்பாடு இருக்காது. இருந்தாலும் அப்பீல் வசதி அல்லது ஆரம்பக் கட்டத்திலேயே இரண்டு நீதிபதிகள் என்று இருந்தால் முரண்பாடே வராது.

இப்படியெல்லாம் செய்யவேண்டும் என நான் நினைத்தேன், அதற்கான வாய்ப்பு வரவில்லை, ஆனால் அதே போன்ற ஒரு செய்தியை படித்தேன்.

வினவு 

வினவு தளத்தில் ஒரு கட்டுரை. திருச்சியில் ஒரு பெண் அவள் காதலனிடம் ஏமாந்திருக்கிறாள். அந்த பிரச்சினை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களிடம் வந்திருக்கிறது. அவர்கள் இதை விசாரித்திருக்கிறார்கள். தீர்ப்பு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இந்த வழக்கின் முழு விவரம் தெரியாமல் நானும் கருத்து சொல்லவிரும்பவில்லை. ஆனால் அவர்களின் இந்த முயற்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.

கம்யுனிஸ்ட்களின் பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர்களின் நேர்மையிலும், சமூக அக்கறையில் சந்தேகம் இல்லை. எனவே அவர்கள் இதுக்கு சரிபட்டு வருவார்கள்.

நான் மேலே சொன்ன திட்டப்படி ஒவ்வொரு ஊரிலேயும் இருக்கும் கம்யுனிஸ அலுவலகங்கலையே நீதிமன்றமாக பயன்படுத்தலாம். அதில் இவர்களே நீதிபதிகளாக இருக்காமல் மக்களில் சிலரை தேர்தெடுத்து அவர்கள் மூலம் விசாரித்தால் அது பெருவாரியான மக்களின் அங்கீகாரத்தை பெறும். இது பொதுச் சேவை என்பதால் பலர் முன்வருவார்கள். அவர்களின் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பை மட்டும் இந்த தோழர்கள் ஏற்றுக் கொண்டால் போதும்.

இந்த பதிவில் `சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டோம்` என்று வருத்தமாக சொல்லி இருந்தார்கள். இதில் வருத்தப்பட என்ன இருக்கு? நிச்சயம் அவர்கள் இதை தொடர வேண்டும்.

தெருவில குப்பையை அகற்றுவது மட்டும் சேவை அல்ல. சமூகத்தில் இருக்கும் அழுக்கான மனிதர்களை தண்டித்து சுத்தம் செய்வதும் ஒரு சேவைதான். அதை செய்யும் உரிமை எல்லோருக்கும் இருக்கு. அதில் வெளிப்படைத்தன்மை தேவை. அவ்வளவுதான்.

டிஸ்கி: பதிவுகளில் சில விஷயங்களை நகைச்சுவைக்காக சொல்வேன். அதை அந்த அளவோடு பாருங்கள் .  


0 comments:

Post a Comment