!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, January 20, 2012

நண்பன் விமர்சனம். ஸாரி, சங்கர் விமர்சனம்


சிறை அனுபவம் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், அது குறித்து கொஞ்சம் ஆழமாகவே எழுத ஆரம்பித்தால், அது பல இணை துணை சம்பவங்களோடு மெகா சீரியலாக போய்க்கொண்டிருகிறது. இதை சில பதிவுகளாக பிரிப்பதா அல்லது அதன் போக்கில் விடுவதா என்ற குழப்பம் ஒரு பக்கம். இதற்கிடையில் நண்பனை பார்த்ததால், அதாவது சங்கரின் `நண்பனை` பார்த்ததால் இந்த பதிவு

டைரக்டர் சங்கர் கமர்ஷியலாக வெற்றிப் பட இயக்குனராக இருந்தாலும், பாய்ஸ் படத்துக்கு பிறகு அவர் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு முன் பசுத்தோல் போர்த்தி வலம் வந்தவர், சில வெற்றிகளை கண்டவுடன், கொஞ்சம் திரையை விளக்கி அவருடைய ரசனையை காட்டி இருக்கிறார். அதற்கு கிடைத்த எதிர்ப்பு அவரை அடக்கி வாசிக்க வைத்தாலும், அவருடைய ரசனைகள் எப்படியும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

Tuesday, January 10, 2012

இங்கே நக்கீரர்கள் யாரும் இல்லை!



கடந்த 5 ம் தேதி வெளிவந்த தினமணி தலையங்கம் `தவறான சிகிச்சை` மிக அருமை. டாக்டர்களுக்கு மட்டும் சுரணை இருந்திருந்தால் இதை படித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு விட்டு சுயபரிசோதனையில் இறங்கி இருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதேசமயம் டாக்டர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. ஒரு வக்கீல் தாக்கபட்டால் வக்கீல்கள் ஸ்ட்ரைக்; கண்டக்டர் தாக்கப்பட்டால் பஸ்கள் ஸ்ட்ரைக் என்று தன் இனத்துக்காக (துறை) குரல் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜாதி மற்றும் மத உணர்வுக்கு இணையாக நாட்டை நாசாமாக்க கிளம்பி இருக்கும் புது வியாதி இது.

Sunday, January 8, 2012

பரிதாபமான கடலூர்!


கடலூருக்கு வந்த சோதனை கொடுமைதான். சுனாமி தாக்கிய அன்று, காலை 9 மணிக்கு கூத்தப்பாக்கத்திலிருந்து வண்டியில் கடைக்கு வந்து கொண்டிருந்தேன். சினிமாவில் பார்ப்பதைப் போல் மக்கள் கூட்டமாக எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்த காட்சியை கண்ட எல்லோருக்கும் திரும்பி ஓட வேண்டும் என்றுதான் தோன்றும். எனவே நானும் திரும்பி விட்டேன். இரண்டாவது முறை கடைக்கு அருகில் வரை வந்துவிட்டேன். அப்போது பல தெரிந்த முகங்களும் `திரும்பி போங்க` என்று கத்தி கொண்டே ஓட, இந்த முறையும் ஓட்டம்.

அவர்கள் ஓடிய வேகத்தை பார்த்தால் கிட்டத்தட்ட கடலூர் பஸ் ஸ்டாண்டை அலை தொட்டுவிட்டதை போன்ற தோற்றம். அந்த நேரம் பார்த்து கடலூர் புதுப்பாளையத்துக்கு போன்கள் வேலை செய்யாததால், சந்தேகம் மேலும் வலுத்தது. சந்தேகமும் வதந்திகளும் மக்களை எப்படியெல்லாம் பயமுறுத்தும் என்பதை நேரடியாக கண்ட சம்பவம் அது. இந்த முறை `தானே` புயல் கடலூரின் அடிப்படை கட்டமைப்பை பெருமளவு சீரழித்திருகிறது.