!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, September 20, 2011

ஒரு நீதிக் கதை, ஒரு விளக்கம், ஒரு ஜோக்ஸ்.


இந்த கதையை ஒரு கென்ய பத்திரிகையில் படித்தேன். அரசியல்வாதிகளும், பிரபலமான மனிதர்களும் படிக்க வேண்டிய கதை. நீதிக் கதைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. இதையே நீங்கள் வேறு விதமாகவும் படித்திருக்கலாம். இருந்தாலும் நீதி கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். எனவே படியுங்கள்.

கென்யாவும் ஜனநாயக நாடு என்பதால், அங்கேயும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் புகார். அங்கே ஒரு கட்டுரையாளர் அவருடைய அரசியல் விமர்சனத்தில் இந்த கதையை சொன்னார்.

அந்த நாட்டு ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.

அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து,  `ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார்.

வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே? 

இனி இந்த கதையில் நீதியை மட்டும் பார்ப்போம். நம் நாட்டில் மக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது, அவர்கள் தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் தரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் உண்மை. எனவே மக்களிடமும் தரம் வேண்டும்தான். ஆனால் அதைவிட வேகமான மாற்றத்தை தலைவர்கள்தான் தரமுடியும்.

எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு குப்பனோ, ராமனோ சிகெரெட் பிடிப்பதை, அல்லது அவர்கள் தரும காரியங்கள் செய்வதை பார்த்து மற்றவர்கள் பின் தொடரும் வாய்ப்பு குறைவு. ஆனால் அதே செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பல கோணங்களில் செய்தி வருகிறது. இது ஜாதிக் கலவரமா, அல்லது போலீசாரின் அத்துமீறலா? இந்த விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை.

ஆனால் நம்மால் ஜாதியை ஏன் இன்னும் ஒழிக்க முடியவில்லை? பல நூற்றாண்டுகளாக ஊறிப் போன ஒரு மனப்பான்மையை உடனடியாக ஒழிப்பது சிரமம்தான். கல்வி அறிவை வளர்த்து அவர்களுக்கு புரிய வைப்பதுதான் ஒரே வழி என்றாலும், இந்த வியாதியை அழிக்க பன்முனை தாக்குதல்களும் தேவை.

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்குத்தான் அரசு அனைத்து துறைகளிலும் முன்னுரிமைதர வேண்டும்.

வேலை வாய்ப்பு, கல்வி கற்பது, கல்விக் கடன், அரசின் இலவசங்கள் இப்படி எதுவாக இருந்தாலும் இவர்களுக்கு போக மீதி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்று அரசு அறிவித்துவிட வேண்டும்.

கலப்பு திருமணம் செய்தால் நிறைய சலுகைகள் கிடைக்கும் என்பதால் இனி எல்லோரும் இந்த பாதையை தேர்ந்தெடுப்பார்கள். எதிர்காலத்தில் `நாங்கள் இந்த ஜாதியை சேர்ந்தவர்கள். எனவே இந்த ஜாதியை தவிர்த்து மற்ற ஜாதியை சேர்ந்த வரன் தேவை` என்று விளம்பரம் வரலாம்.

அதேபோல் `நீங்கள் எந்த ஜாதி?` என்று யாராவது கேட்டால், அப்பா ஜாதியை சொல்றதா இல்லை அம்மா ஜாதியை சொல்றதான்னு குழம்பிப் போய், `நான் எந்த ஜாதியும் இல்லை`ன்னு சொல்லும் நிலை வரவேண்டும். இந்த வார்த்தைகள் உண்மையான மனமாற்றத்தில் வந்தாலும் வரட்டும். அல்லது இந்த மாதிரி குழம்பி போய் வந்தாலும் வரட்டும். எப்படியோ இந்த வசனத்தை பலர் பேச வேண்டும். அதுதான் நமக்கு தேவை.

போலீசார் பொய் கேஸ் போட சில நியாயமான காரணங்களும் இருக்கின்றன என்று ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். `விளக்கம் கொடுங்கள்` என்றார் ஒருவர். சரி அந்த பதிவையும் எழுதி விடுவோம் என்று எழுத ஆரமபித்தால் அது பல கிளைக் கதைகளோடு மெகா சீரியலாக நீளுகிறது. சுருக்கமாக சொன்னால் உங்களுக்கு புரியாது. அதை ஒரு தொடராக எழுதலாம். ஆனால் எனக்கு தொடர் எழுதும் அளவுக்கு பொறுமையும் ராசியும் இல்லை. அவவப்போது ஏதாவது அரசியல் பரபரப்பு ஏற்பட்டால் என் சிந்தனை அங்கே போய்விடும். இபப்டித்தான் ஒரு கோயிலுக்கு போன பதிவை எழுத ஆரம்பித்து அதை அம்போ என் விட்டுவிட்டேன். எனவே நான் கவனித்த விதவிதமான பொய் கேஸ்கள் பற்றிய பதிவை எழுதும் முடிவை விட்டுவிட்டேன்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மேம்பார்வைக்கு சில விஷயங்கள் தவறாக தெரிந்தாலும் அவற்றை நியாயப்படுத்தும் காரணங்களும்  இருக்கின்றன. அந்த துறைகளில் நீங்கள் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப்பட்டு பார்வையாளனாக இருந்து பார்த்தால்தான் அது உங்களுக்கு புரியும்.

அதே போன்றதுதான் பொய் கேஸ்களும். ஒரு தப்பும் செய்யாத அப்பாவிகள் இதனால் பாதிக்கப்படுவது குறைந்த சதவிகிதமாகத்தான் இருக்கும். இது எனது கணிப்புத்தான். இருந்தாலும் நான் இதை உறுதியாக நம்புகிறேன்.  மற்றவை எல்லாம் நீங்கள் வேறு ஏதாவது தப்பு செய்திருப்பீர்கள், ஆனால் அதை கணக்கில் காட்ட முடியாமல் பொய் கேஸ் போடுவார்கள்.

தொடர் குற்றவாளிகளை பொறுத்த வரையில் இவர்கள் மீது வழக்கு பதிவாவதை நீங்கள் பேப்பரில் படிப்பீர்கள். ஆனால் அதில் எத்தனை சதவிகிதம் கண்விக்க்ஷன் ஆகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? யாராவது இந்த புள்ளி விவரங்களை ஆராயுங்கள். உண்மை தெரியும். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் இதற்கு ஒரு காரணமென்றாலும், வேறு பல காரணங்களும் இருக்கிறது. சாட்சிகள் மிரட்டபடுவது, பிறழ்வது போன்றவை சில. ஆனால் பொய் கேஸ்களில் அப்படி நடக்காது. இங்கே எல்லாமே செட்டப்.

ஆனால் இவர்களை உள்ளே வைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் பொய் கேஸ் போடுகிறார்களா அல்லது இதில் அவர்களுக்கு தண்டனை கிடைகிறதா என்று உறுதியாக தெரியவில்லை.

இனி ஜோக்.  

இந்த பதிவில் உண்மையில் நான் போட்ட ஜோக் வேறு. ஆனால் அது சிலரின் மனதை புண்படுத்தக் கூடும் என்பதால் அதை எடுத்துவிட்டேன். இது யதேச்சையாக நடந்த தவறு, மன்னிக்கவும்.

நாம் சில நேரங்களில் சமாளிக்க வேண்டி இருக்கும். ஆனால் அதற்காக இப்படியா பதில் சொல்வது ? 

ஒருவன் புதிதாக ஒரு கம்பனியில் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டான். அதில் ஐந்து வருடத்தில் 10 கமபனியில் வேலை பார்த்ததாக குறிப்பிட்டிருந்தான்.

அந்த நிறுவன மேனேஜர் ` நீங்கள் அடிக்கடி கம்பனி மாறுவீங்க போலிருக்கு?` என்று சந்தேகமாக கேட்க...

அதற்கு அவன், `சார்.. நானா எந்த வேலையும் விடல. அவங்களாத்தான் என்னை நிப்பாட்டிடாங்க` என்றான்.

50 வருட சேமிப்பு! 

ஒரு இள வயது பெண் தனது 70 வயது கணவரோடு ஹனிமூன் போய்விட்டு ரொம்ப களைப்பாக திரும்பி வந்தாள். 

அந்த பெண்ணின் தோழி என்னவாயிற்று என்று கேட்க...

`நான் அம்பது வருஷத்துல நிறைய சேத்து வச்சிருக்கேன்`னு அவர் சொன்னாரு. நான் அதை பணம்ன்னு நினைச்சேன்` என்றாள்.






11 comments:

Yaathoramani.blogspot.com said...

இரண்டு ஜோக்குகளுமே பிரமாதம்
அதை வெறும் ஜோக்காக மட்டும் சொல்லாமல்
நிகழ்வோடு பொருத்திச் சொன்னது அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 2

சக்தி கல்வி மையம் said...

வெறும் நகைச்சுவையாக விட்டு விடாமல் நிகழ்வுகளோடு சொன்னவிதம் அருமை...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

Yoga.s.FR said...

தமிழனுன்னா ஒங்களுக்குக் கிள்ளுக் கீரையாப் போச்சுல்ல?(கிள்ளுக்கீரையே இப்போ காசு தான்!)

சிவானந்தம் said...

@ Ramani

///இரண்டு ஜோக்குகளுமே பிரமாதம்
அதை வெறும் ஜோக்காக மட்டும் சொல்லாமல்
நிகழ்வோடு பொருத்திச் சொன்னது அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர் வாழ்த்துக்கள்///


நன்றி நண்பரே. உங்கள் ஓட்டுக்கும் கருத்துக்கும் நன்றி. முதல் கதையை நான் அரசியலை மனதில் வைத்து எழுதினேன். ஆனால் ஜோக்கை நான் எதேச்சையாக எழுதினேன். பின்னூட்டங்களை படித்த பிறகுதான் அது வேறு ஒரு நிகழ்வை ஞாபகப் படுத்துவதை கவனித்தேன்.

சிவானந்தம் said...

@ வேடந்தாங்கல் - கருன்

///வெறும் நகைச்சுவையாக விட்டு விடாமல் நிகழ்வுகளோடு சொன்னவிதம் அருமை...///

வணக்கம் கருண். உங்கள் வருகைக்கும், கருத்துக்கு நன்றி.

சிவானந்தம் said...

@நண்டு @நொரண்டு

வணக்கம் நண்பரே. உங்கள் கருத்துக்கும் நன்றி

சிவானந்தம் said...

Yoga.s.FR said...
///தமிழனுன்னா ஒங்களுக்குக் கிள்ளுக் கீரையாப் போச்சுல்ல?(கிள்ளுக்கீரையே இப்போ காசு தான்!)///

வாங்க யோகா சார். நானும் தமிழன்தான் அதை முதலில் நினைவு கொள்ளுங்கள்.

இந்த ஜோக்கை நான் யதேச்சையாக போட்டேன். பின்னூட்டங்களை கவனித்த பிறகுதான் இது தவறாக புரிந்து கொள்ளப்படும் சாத்தியத்தை உணர்ந்தேன்.

இதுவரை உங்களை தவிர்த்து வேறு யாரும் குறை சொல்லவில்லை. இருந்தாலும் உங்கள் மீது உள்ள மரியாதையால் உங்கள் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து நான் அந்த ஜோக்கை மாற்றிவிட்டேன்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

சிவானந்தம் said...

@ ரத்னவேல்

வணக்கம் ரத்னவேல் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment