!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, September 13, 2011

வெல்கம் பிஜேபி!


இது (பரபரப்பில்லாத) கிரிக்கெட் சீசன். கிரிக்கெட்டில் அவ்வவப்போது நமது கதாநாயகர்கள் மாறுவார்கள். உண்மையில் கிரிக்கெட்டில் நாம் எந்த ஒரு தனி நபர்களையும் துதி பாடுவதில்லை. அவர்கள் பார்மில் அடித்து ஆடும்போது தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவோம். சரியாக விளையாடாமல் கட்டை போட்டால், `அவுட்டாகித் தொலையேன்` என்று சபிப்போம்.

நாட்டிற்கு வெற்றியையும், பெருமையையும் தேடித்தருகிறார்கள் என்ற வகையில்தான் நாம் இவர்களை ஆதரிக்கிறோம். அவர்களால் நமது அணிக்கு பலம் இல்லை எனும்போது அவர்கள் புறக்கனிக்கப்படுவதையே விரும்புவோம். எனது அரசியல் நிலைப்பாடும் அந்த வகையை சேர்ந்ததுதான். மன்மோகன் சிங் என்ற நேர்மையான பொருளாதார நிபுணர் நம் நாட்டின் பிரதமராக வந்தபோது, இவரால் நாடு வளர்ச்சி பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதுவும் செய்ய இயலாமல் இவர் பொம்மையாய் இருப்பதை பார்க்கும் போது இவர் போய் சேர்ந்தால் தேவலை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.

ஒரு செயல்படக்கூடிய அரசுதான் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதன் மூலம் நாட்டிற்கு வளர்ச்சியை கொடுக்கமுடியும். ஆனால் நாளொரு ஊழல் பொழுதொரு மோசடி என்று நிர்வாகம் செய்ய முடியாமல் இந்த அரசு தவிப்பதை பார்க்கும்போது, இப்படி ஒரு அரசு இருப்பதைவிட மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் அது நாட்டுக்கு நல்லது என்றே தோன்றுகிறது.

பல ஊழல்களில் சிக்கியிருக்கும் காங்கிரசுக்கு வேண்டுமானால் தேர்தலை சந்திப்பது ஆபத்தாக போய் முடியலாம். ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறக்க அதற்கு கால அவகாசம் தேவை. அதன் கூட்டணி கட்சிகள் எல்லாம் இந்த ஆட்சியை கவிழ்க்கும் மனநிலையில் இல்லை. எனவே இப்படியே காலத்தை ஓட்டுவோம் என்று காங்கிரஸ் நினைக்கலாம்.

ஆனால் நிதர்சனம் வேறு மாதிரியாக போகும் வாய்ப்பும் இருக்கிறது. பிஜேபி தற்போது கடுமையான போட்டியை தரக்கூடிய நிலையில் இல்லை என்றாலும், தமிழக மக்களுக்கு கலைஞர் ஆட்சி மீது உருவாக்கி இருந்த கோபம் பின்னர் வெறுப்பாக மாறி அம்மாவே வந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு மக்களும் மற்ற உதிரி கட்சிகளும் வந்ததைப் போல், காங்கிரசின் செயலற்ற தன்மையால் தேசிய அளவிலும் அதே காட்சி அரங்கேற வாய்ப்பிருக்கிறது.

அதேசமயம் பிஜேபி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஒப்பிடல் என்ற தியரி வரும்போது (ஸ்பெக்ட்ரம்)  காங்கிரசுக்கு பிஜேபி பரவாயில்லை என்ற முடிவுக்கே மக்கள் வரக்கூடும்.  சமீப காலங்களில் பிஜேபி மீது மத ரீதியான குற்றச்சாட்டுகளும் எதுவும் இல்லை. எல்லாம் கடந்த கால சுமைகள்தான் (செயல்கள்தான்). மற்ற வகைகளில் அது ஒரு ஆரோக்கியமான மாற்று சக்திதான்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்தவரையில் கனிமொழி வழக்கு: ஓபனிங் நல்லா இருக்கும், ஆனால்... என்று ஒரு பதிவை போட்டிருந்தேன். கிட்டத்தட்ட அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கான விலையை திமுக ஏற்கனவே கொடுத்திருக்கிறது. இனிமேலும் கொடுக்கும். காங்கிரசை மிரட்டலாம், ஆனால் அம்மாவை எப்படி சமாளிப்பது?

டெல்லியில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு. இதை தடுக்க ஒரு மாற்று யோசனையாக `ஒரு கோடி பரிசு` என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். தற்போதைக்கு இதைவிட சிறந்த வழி எனக்கு தெரியவில்லை. இந்த திட்டத்தை அமல் படுத்துவதன் மூலம் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. எப்படியும் லாபம்தான்.

குற்றச் செயல்களில் பலர் ஈடுபடுவதற்கு காரணம் பணம்தான். அதை அரசே கொடுக்கும் என்ற நிலையில் இவர்களில் சிலர் விபிஷனனாக மாறி அரசுக்கு துப்பு கொடுக்கலாம்.  அல்லது மக்களில் சிலர் துப்பறியும் புலியாக மாறி பல விஷயங்களை கண்டுபிடித்தாலும் பல குற்றங்களை தடுத்து விடலாம்.

ஓன்று அரசின் உளவுத்துறை இந்த தீவிரவாதிகளை கண்டுபிடித்து மக்களை காப்பாற்ற வேண்டும். இல்லைஎன்றால் இந்த பரிசுத் திட்டத்தை அறிவித்து மக்களை தூண்டி விடவேண்டும். 


இந்த வாரப் பயணம்.

திருத்தணியை தாண்டி ஒரு கிராமத்துக்கு போயிருந்தேன். அந்த (கொஞ்சம் வளர்ந்த) கிராமத்தை சுற்றி வந்ததில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலும் டிவி இருந்ததை பார்த்தேன். அந்த உறவினரிடம் விசாரித்ததில், அங்கு உள்ளவர்கள் பெரும்பாலோனோர் வீட்டில் மூன்று டிவிகள் இருப்பதாக சொன்னார். கிராமங்களில் இன்னும் கூட்டு குடித்தனம் தொடர்ந்தாலும், ரேஷன் கார்டை மட்டும் தனித்தனியாக பிரித்துவிடுகிறார்கள். எனவே ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு இலவச டிவி என்று வாங்கி வைத்திருகிறார்கள். அவர்கள் வசதிக்காக பிரித்துக் கொள்ளட்டும். ஆனால் இலவசமாக வருகிறது என்பதற்காக அரசுக்கு செலவு வைக்கும் இந்த மனப்பான்மையை என்னவென்று சொல்வது. வேண்டாம் என்று சொன்னாலும் இவர்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டிவிட்டு யாராவது சுருட்டிக் கொள்வார்கள்.

எனவே இந்த முறை அரசு இலவச பொருட்களை வழங்கும் போது, அந்த பொருள் தேவைப்படாதவர்கள் அதற்கு பதிலாக வேறு ஏதாவது வாங்கிக் கொள்ளலாம் என்றாவது அறிவிக்கலாம். அதேபோல் ஒரே வீட்டில் அரசின் இலவசப் பொருட்கள் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடவேண்டும். இலவசங்கள் கொடுப்பது தவறு. அரசியல் காரணங்களுக்காக அதை கொடுப்பது என்று முடிவு செய்தாலும், அதை விரயமாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த கிராமத்திலிருந்து திருத்தணிக்கு பஸ்ஸில் வரும்போது ஒருவர் சொன்னார். திருத்தணி டு சென்னை ஒரு மாதத்திற்கான டிரைன் பாஸ் வெறும் 25 ரூபாய்தானாம். சென்னையிலிருந்து திருத்தணிக்கு ஒரு முறை போகும் டிக்கட்டே 25 ரூபாய்க்கு மேல். அப்படி இருக்கையில் ஒரு மாதத்துக்கு இந்த கட்டணம் என்றால் இது என்ன கணக்கு?

வயது முதிர்ந்தோருக்கும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காகவும் இந்த சலுகையை ரயில்வே நிர்வாகம் தருகிறதாம். நம் நாட்டில் அப்படி ஒரு சர்டிபிகேட் வாங்குவதா சிரமம்? எனவே பலர் இது போன்ற டிக்கட் வைத்திருகிறார்கள். எல்லாம் நம்ம அமைச்சர் ஜெகத்ரட்சகன் அவர்களின் கைங்கர்யம். கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்துக் கொண்டிருக்கிறார்? அதாவது தகுதி இல்லாத பல பேருக்கு அப்படி ஒரு சர்டிபிகேட்டை கொடுத்து ரயில்வேக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்.

0 comments:

Post a Comment